FCRA, 2010 சட்டம் கேள்விகளும் பதில்களும்.
1. FCRA,2010 சட்டத்தின் நோக்கம் என்ன ? FCRA, 2010 சட்டமானது வெளிநாடுகளிலிருந்து தனிநபர்கள் அல்லது சங்கங்கள் அல்லது நிறுவனங்கள் பெறும் பணத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது . மேலும் வெளிநாட்டு பங்களிப்பு மூலம் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தடை செய்வதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 2. FCRA, 2010 சட்டம் யாருக்கு பொருந்தும் ? · இந்தியா முழுவதும் · இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியக் குடிமக்கள். · இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட இந்தியாவிற்கு வெளியே உள்ள நிறுவனங்கள் அல்லது அமைப்புகளின் இணை கிளைகள் அல்லது துணை நிறுவனங்களுக்குப் பொருந்தும். 3. வெளிநாட்டு பங்களிப்பு என்றால் என்ன ? · FCRA, 2010 இன் பிரிவு 2(1)(h)...