தொண்டு நிறுவனங்கள் NGO DARPANல் பதிவு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்களை எப்படிப் பெறலாம்? எளிய விளக்கம் தமிழில்.
NGO Darpan என்றால் என்ன ? NGO Darpan என்பது அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய மாநில அமைச்சகங்கள் / துறைகள் / அரசு அமைப்புகளுக்கு இடையிலான தொடர்பினை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசின் வலைதளமாகும். முதல் கட்டமாக முக்கிய அமைச்சகங்களான கலாச்சாரம் , சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் , சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் , பழங்குடியினர் விவகாரங்கள் , பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு , உயர்கல்வி , பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு , மக்கள் செயல் மற்றும் கிராமப்புற தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான கவுன்சில் , தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ( NACO) மற்றும் மத்திய சமூக நல வாரியம் ( CSWB) உள்ளிட்ட 34 அமைச்சரகங்கள் இந்த தளத்தில் இணைக்கப் பட்டுள்ளன . NGO Darpan ல் யாரெல்லாம் பதிவு செய்யலாம்? 1. அறக்கட்டளை ( Trust) 2. ச ங்கம் (Society) 3. தனியார் வரையறுக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமாக (SEC 8 Company) பதிவுசெய்யப்பட்ட எந்த VO/NGO யும் NGO தர்பன் இல் பதிவு செய்யலாம். NGO Darpan ல் பதிவு செய்வதன் மூ...