Corporate Social Responsibility என்றால் என்ன? தொண்டு நிறுவனங்கள் CSR திட்டங்களை செயல்படுத்த என்ன செய்யவேண்டும்?
சமூகத்தின்
வளர்ச்சியில் தனியார் பெருநிறுவனங்களுக்கும் பங்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தும்
விதமாக, ஒன்றிய அரசானது 2013ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தில் பெரும் மாற்றத்தைக்
கொண்டுவந்தது. அதன்படி, பெருநிறுவனங்கள் தங்களுடைய கடந்த மூன்று ஆண்டுகளின்
லாபத்தின் சராசரியில் இரண்டு சதவீதத்தை சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு
செலவிடவேண்டும்.
இந்தக் கட்டுரையில் Corporate Social Responsibility தொடர்பான அவசியம் தெரிந்துகொள்ள
வேண்டிய அடிப்படை தகவல்களையும், மேலும்
தொண்டு நிறுவனங்கள் Corporate Social Responsibility திட்டங்களில் எவ்வாறு
பங்கேற்க முடியும் என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.
1. கம்பெனிகள்
சட்டம்,
2013ன் கீழ் எந்த நிறுவனங்கள் CSRக்கு தகுதி
பெறுகின்றன?
பின்வரும்
நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்யும் நிறுவனம் கம்பெனிகள் சட்டம், 2013 இன் பிரிவு 135(1) இன் கீழ்
குறிப்பிடப்பட்டுள்ள CSR விதிகளுக்கு இணங்க
வேண்டும்:
I. நிகர மதிப்பு ரூபாய்
ஐநூறு கோடி அல்லது அதற்கு மேல், அல்லது
II. ஆயிரம் கோடி ரூபாய்
அல்லது அதற்கு மேல் வியாபாரம், அல்லது
III. ஐந்து கோடி ரூபாய்
அல்லது அதற்கு மேற்பட்ட நிகர லாபம்.
2. CSR திட்டங்களை செயல்படுத்துவதில் அரசின்
பங்கு என்ன?
தகுதியான நிறுவனங்கள் தான் CSR கொள்கைகளை உருவாக்க வேண்டும்
மேலும் CSR என்பது ஒரு குழு செயல்முறை, நிறுவனத்தின் CSR செயல்பாடுகளை திட்டமிடவும், அங்கீகரிக்கவும், செயல்படுத்தவும்
மற்றும் கண்காணிக்கவும் CSR குழுவிற்கே முழு அதிகாரம் உண்டு.
CSR திட்டங்கள் செயல்படுத்துதல்
/ அனுமதி வழங்குவதில் அரசுக்கு நேரடிப் பங்கு இல்லை.
3. Corporate
Social Responsibility திட்டங்களை செயல்படுத்த யாரெல்லாம்
தகுதியானவர்கள்?
CSR Project எனப்படும் CORPORATE
SOCIAL RESPONSIBILITY திட்டங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நேரடியாக களத்தில் செயல்படுத்தலாம்
அல்லது தொண்டுநிறுவனங்களுக்கு திட்டத்திற்கான நிதியினை அளித்து அவர்கள் மூலமாகவும்
செயல்படுத்தலாம். பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்கள் மூலமாக
திட்டங்களை செயல்படுத்துவதையே விரும்புகின்றன.
4. தொண்டு நிறுவனங்கள் Corporate Social Responsibility திட்டங்களை பெற்று செயல்படுத்துவதற்கு ஏதேனும் தனி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமா?
தொண்டு நிறுவனங்கள் (Trust / Society/ Sec 8
Nonprofit company) CSR திட்டங்களை செயல்படுத்த Ministry of Corporate
Affairs எனப்படும் ஒன்றிய அரசின் அமைச்சரகத்தில் CSR Form 1 பதிவு செய்திருக்க
வேண்டும்.
CSR Form 1 பதிவு செய்யாத தொண்டு
நிறுவனங்கள் CSR திட்டங்களைப் பெற
முடியாது.
5. CSR Budgetல் (Administrative
Heads) நிர்வாக செலவுகளுக்காக அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு
எவ்வளவு? மேலும் எவையெல்லாம் நிர்வாக செலவுகளின் கீழ் வரும்?
CSR திட்டங்களில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நிர்வாக செலவுகளுக்கான ஐந்து. திட்டங்களை செயல்படுத்தும் தொழிலாளிகளின்
சம்பளம்,
பயிட்சிக்கான செலவு , எழுதுபொருட்களுக்கான செலவு மற்றும் தொழிலாளர்களின்
பயணச்செலவும் நிர்வாக செலவுகளின் கீழ் வரும். ஆனால் இந்த ஐந்து சதவீதம் கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு தானே தவிர, CSR திட்டங்களை
செயல்படுத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு பொருந்தாது.
6. Corporate நிறுவனங்கள் தங்களது CSR திட்டங்களை நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தான் செயல்படுத்த வேண்டுமா?
Section 135(5) படி Corporate நிறுவனங்கள்
தங்களது CSR திட்டங்களை நிறுவனத்தை சுற்றியுள்ள
பகுதிகளில் செயல்படுத்தலாமென்ற
வழிகாட்டு நெறிகளைத் தான் வழங்கியுள்ளதே தவிர அதனை கட்டாயமாக்கவில்லை.
7. தொண்டு நிறுவனங்கள் 12A மற்றும் 80G பதிவு செய்திருந்தால் மட்டும்தான் CSR திட்டங்களை பெற முடியுமா?
தொண்டு நிறுவனங்கள் (Trust / Society/ Sec 8
Nonprofit company) CSR திட்டங்களை பெறுவதற்கு இந்திய வருமான வரிச்சட்டம் 1961 கீழ் 12A மற்றும் 80G பதிவு செய்திருக்க
வேண்டும்.
Corporate
Social responsibility மேலும் தெரிந்துகொள்ள 6369646201 என்ற அலைபேசி எண்ணிலோ
அல்லது mohanhr.td@gmail.com என்ற ஈமெயில் மூலமாகவோ
எங்களைத் தொடர்புகொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக