Trust Registration in Tamil Nadu | Step-by-Step Guide (2026)

 Trust Registration in Tamil Nadu

தமிழ்நாட்டில்  சமூக சேவைகல்விசுகாதாரம்பெண்கள் முன்னேற்றம்ஆதரவற்றோர் நலன்சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற லாப நோக்கமற்ற    (Non-Profit) செயல்பாடுகளை சட்டப்படி மேற்கொள்ள ஒரு அறக்கட்டளை (Charitable Trust) உருவாக்கி பதிவு செய்வதற்கான முறையாகும். இது Indian Trust Act, 1882 சட்டத்தின் கீழ் நடைபெறுகிறது.



ஒரு உண்மையோடு நெருக்கமான கதையால் தொடங்கலாம்…

திருநெல்வேலி மாவட்டத்தில், கல்வி உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன்
ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ஒரு Trust தொடங்க முடிவு செய்தனர்.

சேவை செய்ய மனம் இருந்தா போதுமே” என்ற நம்பிக்கையில்
ஆரம்பத்தில் அவர்கள் Trust Registration-க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
சில மாதங்கள் கழித்து வங்கிக் கணக்கு திறக்க முயன்றபோது,
ஒரே கேள்வி திரும்பத் திரும்ப கேட்கப்பட்டது:

“Trust registered-?”

அதே கேள்வி NGO DARPAN பதிவு செய்யும்போதும்,
ஒரு CSR நிறுவனத்தை அணுகியபோதும் எழுந்தது.

பின்னர் அவர்கள் உணர்ந்தது ஒன்று தான் –
Trust Registration என்பது formal process மட்டும் அல்ல,
Trust-
இன் எதிர்காலத்தை பாதுகாக்கும் அடித்தளம்.

சரியான Trust Deed தயாரித்து,
Sub-Registrar Office-ல் Trust பதிவு செய்த பிறகே
வங்கிக் கணக்கு, NGO DARPAN, 12A & 80G ஆகியவை
ஒரு ஒன்றாக சாத்தியமானது.

Trust Registration ஏன் அவசியம்?

Trust Registration ஏன் அவசியம்?

Trust பதிவு செய்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:

• Trust-க்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கும்
• Trust பெயரில் Current Bank Account திறக்க முடியும்
• 12A & 80G வரிவிலக்கு பதிவு பெற முடியும்
அரசு மற்றும் CSR நிதி பெற தகுதி கிடைக்கும்
• NGO DARPAN Portal-ல் பதிவு செய்ய முடியும்
• Trust-க்கு நம்பகத்தன்மை அதிகரிக்கும்

👉 பல Trust-கள் சேவையை ஆரம்பிக்கிறார்கள்,
ஆனால் பதிவு செய்யாததால் வளர்ச்சியில் பின்னடைவு சந்திக்கிறார்கள்.

Trust Registration in Tamil Nadu – Step-by-Step Process (2026)

Step 1: Trust Name தேர்வு

Trust பெயர் ஏற்கனவே உள்ள Trust, Society அல்லது Company பெயரைப் போல இருக்கக்கூடாது.
மத, அரசியல் அல்லது சர்ச்சைக்குரிய சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

Tip:
எளிமையான, சேவை நோக்கத்தை பிரதிபலிக்கும் பெயர் சிறந்தது.

Step 2: Trustees தேர்வு

Trust பதிவு செய்ய குறைந்தபட்சம் 2 Trustees அவசியம்.
தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் Trustees ஆக இருக்க சட்டப்படி அனுமதி உள்ளது.

ஆனால்:
நம்பகமானவர்கள் இருக்க வேண்டும்
நீண்ட காலம் Trust-ஐ நடத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

Step 3: Trust Deed தயாரித்தல் (Trust Deed Tamil)

Trust Deed என்பது Trust-இன் அடிப்படை ஆவணம்.
இதில் சிறிய தவறு கூட எதிர்காலத்தில் பெரிய சட்ட சிக்கலை ஏற்படுத்தலாம்.

Trust Deed-ல் இடம்பெற வேண்டிய முக்கிய விஷயங்கள்:

• Trust பெயர் மற்றும் முகவரி
• Trust தொடங்கும் தேதி
• Trust-ன் நோக்கங்கள் (Charitable Objectives)
• Trustees விவரங்கள்
• Trust சொத்துகள் / ஆரம்ப நிதி
• Trust நிர்வாக விதிகள்
கணக்கு பராமரிப்பு விதிமுறைகள்
• Trust கலைப்பு (Dissolution clause)

👉 Trust Deed தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் தயாரிக்கலாம்.

⚠️ முக்கிய குறிப்பு:
தமிழ்நாட்டில் Trust Deed-
வழக்கறிஞர் அல்லது உரிமம் பெற்ற ஆவண எழுத்தர் மட்டுமே தயாரிக்க வேண்டும்.

Step 4: Stamp Paper-ல் Trust Deed அச்சிடுதல்

Trust Deed பொதுவாக ₹100 அல்லது ₹200 மதிப்புள்ள
Non-Judicial Stamp Paper-ல் அச்சிடப்படுகிறது.
(Stamp value மாவட்டத்தைப் பொறுத்து மாறலாம்)

Step 5: Sub-Registrar Office-ல் பதிவு

நிறுவனர் மற்றும் சாட்சிகள் நேரில் சென்று Trust Deed-ல் கையெழுத்திட்டு,
சம்பந்தப்பட்ட Sub-Registrar Office-ல் Trust-ஐ பதிவு செய்ய வேண்டும்.

👉 இந்த நாள் Trust-இன் பிறந்த நாள் போலக் கருதப்படுகிறது.


Trust Registration in Tamil Nadu – Required Documents

Trustees-க்கு தேவையான ஆவணங்கள்

         Trustees Aadhaar Card

         Office Address Proof

         Rental building என்றால் Owner-ன் NOC

         Trust Deed

         Witnesses Aadhaar card

Trust Registration Timeline (2026)

Trust Registration-க்கு பொதுவாக எடுக்கும் கால அவகாசம்:

• Trust Deed Drafting – 2 முதல் 4 நாட்கள்
• Stamp Paper & Signing – 1 நாள்
• Sub-Registrar Registration – அதே நாள்

👉 மொத்தமாக 7 முதல் 15 நாட்களுக்குள் Trust Registration முடியும்.

Trust Registration முடிந்த பிறகு செய்ய வேண்டிய முக்கிய பணிகள்

• Trust-க்கு PAN Card
Trust பெயரில் Current Bank Account திறத்தல்
• NGO DARPAN Registration
• 12A & 80G Registration

Trust Registration – பொதுவான தவறுகள் (Avoid These)

• Copy-paste Trust objectives பயன்படுத்துதல்
• Trust Deed-ல் தவறான அல்லது incomplete clauses
• Address proof mismatch
• Tax compliance-ஐ ஆரம்பத்திலேயே திட்டமிடாதது

முடிவுரை

Trust Registration என்பது
ஒரு Trust-ஐ தொடங்குவதற்கான formal process மட்டும் அல்ல,
அதன் எதிர்காலத்தை பாதுகாக்கும் சட்ட அடித்தளம்.

ரமேஷ் போன்ற பலரும் அனுபவித்தது போல,
சரியான Trust Deed + முறையான பதிவு
Trust-ஐ நீண்ட காலம் சமூக சேவையில் நிலைத்திருக்க உதவும்.

இந்த விஷயத்தை வீடியோ விளக்கமாக புரிந்துகொள்ள விரும்பினால்,
Trust Registration, Trust Deed Tamil, 12A & 80G, CSR போன்ற
practical guidance-களை எங்கள் YouTube சேனலில் காணலாம்.

👉 எங்கள் YouTube சேனல்:
https://www.youtube.com/channel/UCKGs0gAhlggb9pKmcbA98jw

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Resolution for Opening Bank account for the NGOs

தொண்டு நிறுவனங்கள் NGO DARPANல் பதிவு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்களை எப்படிப் பெறலாம்? எளிய விளக்கம் தமிழில்.

உங்க Trustக்கு Bank Account open பண்ணனுமா?